இந்த திரைப்படம் மற்றும் ஒரு காதல் காவியம். காதலுக்கு மகுடம். பணத்தாசை பிடித்த காவல் துறைக்கு ஒரு சவுக்கடி. பணக்காரர்களுக்கு ஒரு எச்சரிக்கை.
இப்படி எல்லாரும் சொல்றத நானும் சொல்ல விரும்பல. கமர்சியலா ஒரு படம் ஹிட் ஆகனும்னா அதுக்கு அத்யாவசியமா ஆறு பாட்டு, நாலு ஃபயிட்டு, பன்ச் டயலாக்கு, திரையில ஒரு அயிட்டம் சாங்கு அப்டி இப்டின்னு எல்லாம் இருக்கனும், இல்ல - இதுல சில உறுப்படியாவது இருக்கனும்னு நம்பி இருக்குற தயாரிப்பளர்களுக்கு இந்த படம் தமிழில் வெளிவந்த சிற்சில 'குறைந்த பட்ஜெட் ஹிட்பட'ங்கள் வரிசையில் மற்றுமொரு நம்பிக்கை. காதல், பருத்திவீரன், கல்லூரி என்று இன்றும் மனதில் நிற்கும் படங்களின் வரிசையில் இதுவும் ஒன்று!
ஒரு வரி கதைக்கு இப்படியும் ஒரு திரை வடிவம் கொடுக்க முடியும் என்று சவால் விடுகிறார் இயக்குனர். சில காட்சிகளின் கேமரா மூவ்ஸ் திரைக்கதைக்கு சரியாக வலிமை சேர்த்திருக்கிறது. மழையில் அழிந்த ஸ்லேட், எரிகின்ற மண்னெண்ணெய் ஸ்ட்வ், ரோட்டில் அனாதையாய் கிடக்கும் காலி கண்ணாடி பாட்டிலலின் பின்னால் நகரும் கதை, சீலிங் ஃபேன் ரிஃப்லெக்ஷனில் காட்டப்படும் அமைச்சர் செயல்கள், சென்ட்ரல் ரயில் நிலைய சுரங்க பாதையின் சிமெண்ட் ஜன்னல் (ஜாலி) வழியே காட்டப்படும் கதாநாயகன் மயக்கத்தில் விழும் காட்சி, புதிதாய் கழுத்தில் தொங்கும் தாலி பளிச்சென்று தெரிய ஜோதி முகத்தில் சிரிப்போடு கண்ணத்தில் விழும் குழி என்று கேமராமேன் உயிரோட்டத்திற்கு ஆக்ஸிஜென் சப்ளை பன்னியிருக்கார். மிகைப்படுத்தாமல் காட்டப்பட்டிருக்கும் கதாநாயகன், இப்படித்தான் இருப்பாள் இந்த இடத்தில் வாழும் ஒரு பெண்பிள்ளையைப் பெற்ற கணவனை இழந்த தாய் என்று அழுத்தி சொல்வது, 'ட்ரீம் சாங்' என்ற பெயரில் எதையும் சேர்க்காமல் சொதப்பாமல் விட்டிருப்பது என்பது போன்ற விஷயங்கள் எல்லாம் படத்திற்கு ப்ளஸ்.
கிட்டதட்ட எல்லாமே புதுமுகங்களாய் காட்சியளிப்பது கதைக்கு மெருகு தான். இதை யோசித்து திட்டமிட்டு இயக்குனர் முடிவெடுத்திருந்தால்தான் அது அவரின் திறமையை பறைசாற்றுவதாய் இருக்கும். நடிகர்கள் அனைவரும் தங்களுக்கு கொடுத்த பொறுப்பை மிகவும் சிறமப்படாமல் நடிப்பில் வெளிக்காட்டியிருப்பது போல் தெரியும் அளவிற்கு இயக்குனர் கஷ்டப்பட்டிருக்கிறார் என்பது தின்னம்.
துனிச்சலான கதாநாயகியின் முடிவிற்குப்பின் படத்தின் கதை விரட்டி சொல்லப்ட்டிருக்க வேண்டாம் என்று தோன்றுகிறது. இருந்தாலும் குறை ஒன்றும் இல்லை என்றே சொல்லி முடிக்கவும் தோன்றுகிறது. வழக்கு எண் : 18/9ன் மதிப்பீடு 8/9.
நன்றி.
No comments:
Post a Comment